ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடம்!
ஐசிசி புதிய தரவரிசையில் அபிஷேக் சர்மா டி20 பேட்டிங்கில் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார். மார்கோ யான்சன் டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ள புதிய கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய வீரர் அபிஷேக் சர்மா டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சன் டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்
மீண்டும் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். வெறும் 35 பந்துகளில் சதத்தை எட்டிய அவர், மொத்தம் 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தச் சிறப்பான ஆட்டத்தின் மூலம், டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சக வீரர் இஷான் கிஷனை பின்னுக்குத் தள்ளி அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சனும் புதிய தரவரிசையில் பெரிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 85 ரன்கள் எடுத்ததுடன், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.இந்தச் சிறப்பான செயல்பாட்டின் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில்முதலிடத்துக்கு முன்னேறிய யான்சன், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தைத் தக்கவைத்திருந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்
மற்ற இந்திய வீரர்களுக்கும் முன்னேற்றம்!
இந்திய வீரர் சஞ்சு சாம்சன் டி20 பேட்டிங் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் 6 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார்.இதேபோல் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்திய போட்டிகளில் வீரர்கள் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம், ஐசிசி தரவரிசையில் இந்த மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.