TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ரூ. 634 கோடி மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் மீண்டும் சோதனை!

Share This Article:

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி வீட்டில் ரூ.634 கோடி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ. 634 கோடி மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் மீண்டும் சோதனை!

திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தில்லை நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 7 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை நடைபெறும் நேரத்தில், கே.என்.நேருவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வீட்டிற்குள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் போது அவர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், சுமார் 634 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், சாலைப் பணிகளுக்கு கமிஷன் பெற்றதாகவும், 2,538 அரசு வேலைகளுக்கு லஞ்சம் வாங்கியதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இது குறித்து அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி-க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நேரு தாக்கல் செய்த மனு அக்டோபர் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலேயே இந்த அதிரடி சோதனை நடக்கிறது.

Content image

கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரனின் மகனுக்கு வரும் 16-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில், திடீரென நடக்கும் இந்த சோதனை அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சோதனை நடக்கும் தகவல் அறிந்து நேருவின் வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக ஏற்கனவே கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியும் சோதனை நடைபெற்றது. அப்போது சென்னை, திருச்சி, கோவை என கே.என்.நேருவுக்கு தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions