TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங்: சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் உழைப்புச் சுரண்டல் - அன்புமணி கடும் கண்டனம்!

Share This Article:

தமிழ்நாடு அரசுத்துறைகளில் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் மூலம் குத்தகை (அவுட்சோர்சிங்) முறையில் பணியாளர்களை நியமிக்கும் அரசின் நடவடிக்கைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இடஒதுக்கீட்டை ஒழித்து, உழைப்பைச் சுரண்டும் சமூக அநீதி என அவர் விமர்சித்துள்ளார்

அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங்: சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் உழைப்புச் சுரண்டல் - அன்புமணி  கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை 'வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன்' நிறுவனம் மூலம் குத்தகை (அவுட்சோர்சிங்) முறையில் நியமிக்க மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடைநிலை ஊழியர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள், இளநிலை உதவியாளர்கள் முதல் அலுவலக மேலாளர்கள் வரை இனி நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக இந்த வகையிலேயே நிரப்பப்பட உள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசுத்துறைகளில் நிரந்தரப் பணி நியமனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த நடைமுறை மூலம் மிகப்பெரிய அளவில் உழைப்புச் சுரண்டல் நடைபெறுவதாக அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். உதாரணமாக, டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரந்தரமாகத் தேர்ந்தெடுக்கப்படும் இளநிலை உதவியாளருக்கு அனைத்துப் படிகளுடன் சேர்த்து மாதம் ரூ.36,000 வரை ஊதியம் கிடைக்கும்.

ஆனால், குத்தகை முறையில் நியமிக்கப்படுபவர்களுக்கு வெறும் ரூ.20,000 மட்டுமே வழங்கப்படும். இதேபோன்று, அலுவலக கண்காணிப்பாளருக்கு ரூ.70,000-க்கு பதிலாக ரூ.30,000-மும், மேலாளர் பணிக்கு ரூ.84,000-க்கு பதிலாக ரூ.40,000-மும் மட்டுமே வழங்கப்படும். சரிபாதிக்கும் குறைவான ஊதியத்தை வழங்கி ஊழியர்களை அரசுச் சுரண்டுவது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

Content image

இதில் உள்ள மிக மோசமான அநீதி, இடஒதுக்கீடு மறுக்கப்படுவதுதான். போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும்போது இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால், பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் அரசு வேலைவாய்ப்பை பெற முடிகிறது. ஆனால், வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் மூலம் ஆட்களை எடுக்கும்போது இடஒதுக்கீடு அறவே பின்பற்றப்பட மாட்டாது.

இது பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் பின்னோக்கித் தள்ளும் செயலாகவே அமையும். பெரியார் மற்றும் அம்பேத்கரை வழிகாட்டிகளாகக் கொண்டிருப்பதாகக் கூறும் தவெக அரசு, சமூக நீதியை காவு கொடுக்கும் இது போன்ற அநீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமற்றது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளில் தொடங்கப்பட்ட இந்த அவுட்சோர்சிங் முறையை, தவெக அரசு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் விரிவுபடுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2026 தேர்தல் அறிக்கையில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த தவெக, தற்போது அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது.

வேலைவாய்ப்பு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தையும் முன்னேற்றத்தையும் தரும் கருவியாகும். எனவே, அவுட்சோர்சிங் முறையை அரசு உடனடியாகக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் எனவும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions