TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தேனி சிறை தப்பியோட்ட விவகாரம்: சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம் - புதிய ஏடிஜிபியாக சங்கர் நியமனம்!

Share This Article:

தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை பாதுகாப்பில் எழுந்த விமர்சனங்களால் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி சிறை தப்பியோட்ட விவகாரம்: சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம் - புதிய ஏடிஜிபியாக சங்கர் நியமனம்!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் திடீரென தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை இரவு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு இந்த கைதிகள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தையடுத்து, தப்பியோடிய 17 கைதிகளையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி மீண்டும் கைது செய்தனர்.

இந்த தப்பியோட்டத்திற்கு காவலர்களின் மனித தவறே காரணம் என தெரியவந்ததால், தலைமைக் காவலர்கள் உட்பட 9 சிறைக் காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து அப்போதைய சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். மேலும், இனி காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பினால் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கலாம் எனவும் அவர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

Content image

தப்பிய கைதிகள் அனைவரும் மீண்டும் பிடிபட்டாலும், சிறைத்துறையின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகள் எழுந்தன. ஏற்கனவே சென்னை புழல் சிறையிலும் இதுபோன்று கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் சமீபத்தில் நடந்திருந்த நிலையில், அடுத்தடுத்து தேனியிலும் இச்சம்பவம் அரங்கேறியது சிறைத்துறை நிர்வாகத்தின் மீதான கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த தொடர் விமர்சனங்கள் மற்றும் தேனி சிறை விவகாரத்தின் எதிரொலியாக, தமிழக அரசு தற்போது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, புதிய சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions