குடிநீரை வீணடித்தால் ரூ.10,000 அபராதம்! புனே மாநகராட்சி அதிரடி உத்தரவு!
மராட்டிய மாநிலம் புனேவில் குடிநீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மூன்றாவது முறையாக விதிமீறினால் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவில் குடிநீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைத் தடுக்கவும், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புனே மாநகராட்சியின் புதிய உத்தரவு
புனே மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. குடியிருப்பு வளாகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் பயன்பாடு கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அணைகளில் நீர்மட்டம் குறையும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
எந்தெந்த செயல்களுக்கு அபராதம்?
- வீடுகளில் தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிய அனுமதித்தால் ரூ.1,000 அபராதம்.
- குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களை முழுமையாகக் கழுவினால் ரூ.10,000 வரை அபராதம்.
- நீச்சல் குளங்களை குடிநீரால் நிரப்பினால் ரூ.10,000 வரை அபராதம்.
- தனியார் தோட்டங்களுக்கு குடிநீரைப் பயன்படுத்தினால் ரூ.10,000 வரை அபராதம்.
வணிக ரீதியான கட்டுமானப் பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும்.
3-வது முறை விதிமீறினால் கிரிமினல் வழக்கு!
முதல் மற்றும் இரண்டாவது முறை விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் குடிநீரை வீணடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.