TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

காதலில் ஏற்பட்ட மனக்கவலையில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா

Share This Article:

காதல் உறவில் ஏற்பட்ட துரோகத்தால் 2020ஆம் ஆண்டு மனதளவில் முற்றிலும் உடைந்து போனதாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார். அந்த அனுபவத்திலிருந்து மீண்டு வந்த விதம் மற்றும் பெண்களுக்கு அவர் வழங்கியுள்ள அறிவுரைகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

காதலில் ஏற்பட்ட மனக்கவலையில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ''ரெஜினா கசாண்ட்ரா'' தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் அனுபவம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனவேதனை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

நடிகை ரெஜினா தனது திரைப்பயணத்தை சிறுவயதிலேயே தொடங்கினார். பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, 'கண்ட நாள் முதல்', 'அழகிய அசுரா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'மாநகரம்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'காஞ்சனா 3', 'செவன்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது 'முக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Content image

காதல் உறவில் ஏற்பட்ட துரோகம் – மனதளவில் உடைந்தேன்!

இந்நிலையில், ரெஜினா அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதலில் சந்தித்த கசப்பான அனுபவம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனவேதனை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அதில், தனது காதல் உறவு 2020ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டதாகவும், அந்தக் காதல் உறவில் தான் கடுமையாக ஏமாற்றப்பட்டதால் மனதளவில் முற்றிலும் உடைந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு காதல் உறவில் துரோகம் ஏற்பட்டபோது, இனிமேல் சில காலத்திற்கு எந்தவொரு காதல் உறவிலும் ஈடுபடக்கூடாது என்று முடிவெடுத்ததாகக் கூறியுள்ளார். தனது நேரத்தையும் கவனத்தையும் தனக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதே காலகட்டத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியதால், கிடைத்த நேரத்தைத் தனக்காகச் செலவிட்டு சுய அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், இன்று மனதளவில் தெளிவான நிலையை அடைந்திருப்பதற்கு அதுவே முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளார்.

பெண்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்!

மேலும், பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் தவறான முறையில் தொடப்படுவது, பாலியல் அத்துமீறல்கள் போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்படுவதாக ரெஜினா தெரிவித்துள்ளார்.

தோழிகளுடன் மனம் விட்டுப் பேசும்போதுதான் இதுபோன்ற அனுபவங்கள் பல பெண்களின் வாழ்க்கையிலும் நடந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

காதல் உறவுகளில் ஏமாற்றப்படுவது பல பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பதால், நமக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று நினைத்து வருந்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, தங்களது அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அழ வேண்டும் என்று தோன்றினால் மனதார அழுங்கள்!

வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது துக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று. அப்போது அழ வேண்டும் என்று தோன்றினால் மனதார அழுங்கள். காலையிலிருந்து இரவு வரை அழ வேண்டும் என்றாலும் அழுங்கள் என்று ரெஜினா தெரிவித்துள்ளார்.

அதேபோல், நான் ஏன் இப்படி இருக்கிறேன்? ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறேன்? என்று உங்களையே கேள்வி கேட்டு மனதளவில் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வாழ்க்கையில் ஒரு வலிமிகுந்த சம்பவம் நடந்திருந்தால், அதிலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான அன்பையும் அக்கறையையும் முதலில் உங்களுக்கே வழங்கிக் கொள்ளுங்கள் என்று தனது அனுபவத்தின் மூலம் பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறையில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions