TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: பழைய குடியிருப்புகளை இடிக்க டெண்டர்!

Share This Article:

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியதால் திட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அங்குள்ள பழைய குடியிருப்புகளை அகற்றுவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: பழைய குடியிருப்புகளை இடிக்க டெண்டர்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள 96 பழைய குடியிருப்புகளை அகற்றுவதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இந்த பழமையான குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.

முன்னதாக, 20 லட்சம் சதுரடி பரப்பளவில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை கோட்டை வளாகத்தில் நிலவும் இடநெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Content image

இருப்பினும், பட்டினப்பாக்கத்தில் இத்திட்டம் அமைவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர் மற்றும் மயிலை உள்ளிட்ட பகுதி மீனவ அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத் திட்டம் கைவிடப்பட்டு, பல்லவன் இல்லம் போன்ற மாற்று இடங்களில் செயலகம் அமையலாம் எனத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணை இதுவரை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படவில்லை. அறிவிப்பு முழுமையாகத் திரும்பப் பெறப்படாத நிலையில், தற்போது திட்டமிடப்பட்ட இடத்தில் உள்ள பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions