விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’ ஓடிடி வெளியீடு எப்போது? நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘ரணபலி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"விஜய் தேவரகொண்டா" மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், உலகளவில் சுமார் ரூ.80 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
1870-களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய வீரனின் வாழ்க்கையையும், மக்களுக்காக அவர் மேற்கொண்ட போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓடிடி ரிலீஸ் அப்டேட்
இந்த நிலையில், ‘ரணபலி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் அறிவிப்பு பின்னர் நீக்கப்பட்டதால், இந்த வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மேலும், இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், படக்குழு அல்லது நெட்ஃபிளிக்ஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
திரையரங்குகளில் இப்படத்தைத் தவறவிட்ட ரசிகர்கள் ஓடிடி வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.