TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ரூ.35 கோடி சொத்துக்குவிப்பு விவகாரம்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Share This Article:

வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய த.வெ.க நிர்வாகியுமான சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு சட்டவிரோத பணப்பரிமாற்ற விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

ரூ.35 கோடி சொத்துக்குவிப்பு விவகாரம்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவரும், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளருமான சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, வருகிற வெள்ளிக்கிழமை ஒருவரும், அடுத்த வாரம் மற்றொருவரும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியை எடுத்துக்கொண்டால், சி. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.அதன்பின்னர், 2023 ஆம் ஆண்டு மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், விஜயபாஸ்கர் சுமார் ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் சட்டவிரோதமாகக் குவித்துள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

Content image

லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த வழக்கின் அடிப்படையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் (Money Laundering) ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரிப்பதற்காக அமலாக்கத்துறையும் (ED) களத்தில் இறங்கியது.அதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 21, 2024 அன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதோடு, முதற்கட்டமாக சம்மன் அனுப்பப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியின் வாக்குமூலங்களும் அப்போது பதிவு செய்யப்பட்டன. தற்போது இந்த வழக்கின் அடுத்தகட்டமாக, அவர்கள் குவித்ததாகக் கூறப்படும் அந்த ரூ.35.79 கோடி சொத்துக்களின் முதலீடுகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் குறித்து மேலும் ஆழமாக விசாரிப்பதற்காகவே இந்த இரண்டாவது கட்ட சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் விஜயபாஸ்கர் செயல்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறையின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions