TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுரை மத்திய சிறையில் பயங்கரம்: குடிநீரில் குளிக்க முயன்றதை தடுத்த காவலர் மீது கைதி கொடூர தாக்குதல்!

Share This Article:

மதுரை மத்திய சிறையில், குளிப்பதற்கு ஆழ்குழாய் நீருக்கு பதிலாக குடிநீரை பயன்படுத்த முயன்ற கைதியை தடுத்த தலைமை காவலர் தெய்வநாயகம் முகத்தில் கொடூரமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மத்திய சிறையில் பயங்கரம்: குடிநீரில் குளிக்க முயன்றதை தடுத்த காவலர் மீது கைதி கொடூர தாக்குதல்!

மதுரை மத்திய சிறைச்சாலையில், குளிப்பதற்காக குடிநீரை பயன்படுத்த முயன்ற கைதியை தடுத்த தலைமை காவலர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய செய்திகளின்படியும் இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய சிறையில் ஆண், பெண் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் என 2,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை கைதிகள் குளிக்கும் பகுதியில் நுற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது, கைதிகள் குளிப்பதற்கு ஆழ்குழாய் (Borewell) வசதி இருக்கும் நிலையில், மூர்த்தி (35) என்ற கைதி குடிநீரை வாளியில் பிடித்து குளிக்க முயன்றுள்ளார்.

Content image

இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் தெய்வநாயகம் (52), குடிநீரை வீணடிக்கக் கூடாது என கைதி மூர்த்தியை கண்டித்துள்ளார். மேலும், அவரது கையிலிருந்த தண்ணீர் வாளியையும் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைதி மூர்த்தி, எதிர்பாராத விதமாக தனது கைகளால் காவலர் தெய்வநாயகத்தின் முகத்தில் சரமாரியாக குத்தி கொடூரமாக தாக்கியுள்ளார்.

இந்த திடீர் தாக்குதலில் காவலர் தெய்வநாயகத்தின் கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த மற்ற கைதிகள் வேடிக்கை பார்த்த நிலையில், சக காவலர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் கைதி மூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions