TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஓட்டு போடாதவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்! இல்லையெனில் மாரியம்மா சும்மா விடமாட்டாள் – தோல்வியடைந்த வேட்பாளர் ஆவேசம்!

Share This Article:

ஆந்திராவில் வாக்காளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பணம் கொடுத்தும் தோல்வியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பிரசாத் ரெட்டி, தனக்கு வாக்களிக்காதவர்கள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.

ஓட்டு போடாதவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்! இல்லையெனில் மாரியம்மா சும்மா விடமாட்டாள் – தோல்வியடைந்த வேட்பாளர் ஆவேசம்!

ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர், தனக்கு வாக்களிக்காதவர்கள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர்களுக்கு ரூ.10 லட்சம் விநியோகம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேரு நகராட்சியின் 32-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாத் ரெட்டி என்பவர் போட்டியிட்டார்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் சுமார் ரூ.10 லட்சம் வரை அவர் பணம் விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஜனசேனா கட்சி வேட்பாளர் பூலா ஷெட்டியிடம் பிரசாத் ரெட்டி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் வெற்றி கிடைக்காததால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.

"பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்... மாரியம்மா சும்மா விடமாட்டாள்!"

இதனைத் தொடர்ந்து பிரசாத் ரெட்டி வெளியிட்ட வீடியோவில், தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 சதவீத வட்டிக்கு கடன் வாங்கி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் வாங்கிக்கொண்டு தனக்கு வாக்களிக்காத 400 பேர் உடனடியாக பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாரியம்மாள் கோயிலில் அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பணத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அமர்ந்துவிடுவேன் என்றும், பணத்தைத் தராமல் ஏமாற்றினால் மாரியம்மா சும்மா விடமாட்டாள் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், வாக்காளர்கள் திருப்பிக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு வார்டில் தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதே சட்டப்படி குற்றமாகும் நிலையில், தோல்வியடைந்த பிறகு பணத்தைத் திருப்பிக் கேட்டு வேட்பாளர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions