TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சூர்யாவின் அதிரடி வேட்டை... ரசிகர்களைக் கவரும் ‘சீன்’ திரைப்படம் – முழு விமர்சனம்!

Share This Article:

நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் அதிரடி, நகைச்சுவை மற்றும் மர்மக் கொலைகள் நிறைந்த விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் முழு விமர்சனம் இதோ!

சூர்யாவின் அதிரடி வேட்டை... ரசிகர்களைக் கவரும் ‘சீன்’ திரைப்படம் – முழு விமர்சனம்!

நடிகர் "சூர்யா" நடிப்பில் வெளியாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. வித்தியாசமான கதைக்களம், அதிரடி காட்சிகள், நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இப்படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கியுள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் காவல்துறை பணியிலிருந்து விலகி விட நினைக்கும் அவர், அதற்கான முடிவை எடுக்கிறார். இதற்கிடையில் நகரில் அடுத்தடுத்து சில படுகொலைகள் நடைபெறுகின்றன. காவல்துறை அதிகாரியாக இருக்கும் சூர்யா, அந்தக் கொலைகளின் பின்னணியைக் கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார்.

கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர் யார்? அவரைக் கண்டுபிடிப்பதில் சூர்யா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்ற கேள்விகளுடன் திரைப்படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

இதற்கிடையில் சூர்யா படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் வழக்கமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. அவரது நடிப்பில் வெளிப்படும் நகைச்சுவை, அதிரடி மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

கண் பார்வை தொடர்பான சூழலில், காவல்துறையிலிருந்து விலகிய சூர்யா அந்தக் குற்றவாளியைப் பிடிப்பாரா? அந்தக் குற்றவாளி யார்? கொலைகளின் பின்னணி என்ன? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்லும் பரபரப்பான திரைக்கதையாக இப்படம் அமைந்துள்ளது.

Content image

"சூர்யா" ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து நடித்திருக்கிறார். அழுத்தமான நடிப்பு, ஜாலியான அணுகுமுறை மற்றும் வேடிக்கையான காட்சிகள் மூலம் முழுப் படத்தையும் ரசிக்கச் செய்திருக்கிறார். கொலையாளியைக் கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் தந்திரங்களும் ஆராய்ச்சியும் கதைக்கு விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்பியுள்ள "நஸ்ரியா" தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நஸ்லென், வில்லத்தனத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் சூர்யாவுக்கும் இடையிலான காட்சிகள் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை அளிக்கின்றன.

ஆனந்தராஜ், லால் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் பொழுதுபோக்கு அம்சத்தை அதிகரிக்கின்றன.

வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவில் காட்சிகள் பரபரப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுஷின் ஷ்யாமின் இசையும் பின்னணி இசையும் திரைப்படத்தின் விறுவிறுப்புக்கு வலுசேர்க்கின்றன.

மொத்தத்தில், வழக்கமான க்ரைம் திரில்லர் கதையாக இல்லாமல் நகைச்சுவை, அதிரடி, மர்மம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என அனைத்தையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள ‘சீன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு ரசிக்கக்கூடிய திரையரங்க அனுபவத்தை வழங்குகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions