கோடை வெயிலுக்கு இதமான 'லோ-கலோரி' தயிர் பூந்தி சாட்! உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏதுவான ஸ்நாக்ஸ்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே குளிர்ச்சியாகவும், அதே சமயம் நாவிற்கு உருசியாகவும் எதையாவது சாப்பிடத் தோன்றும். ஆனால், நாம் சாப்பிடும் நொறுக்குத் தீனிகள் உடல் எடையை அதிகரித்துவிடுமோ என்ற பயம் பலருக்கு இருக்கும். அவர்களின் கவலையைப் போக்க இதோ ஒரு அட்டகாசமான 'லோ-கேலரி தயிர் பூந்தி சாட்' (Low-Calorie Dahi Boondi Chaat).

ஏன் இது சிறந்தது? சாதாரண சாட் உணவுகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் மசாலாக்கள் இருக்கும். ஆனால், இந்த தயிர் பூந்தி சாட்டில் குறைந்த அளவு காரமான பூந்தியையும், அதிக அளவு புரோட்டீன் நிறைந்த தயிரையும் சேர்ப்பதால் இது ஜீரணத்திற்கு உதவுவதோடு உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
தேவையான பொருட்கள்:
- குறைந்த கொழுப்புள்ள தயிர் (Low-fat Curd)
- கார பூந்தி (சிறிது அளவு)
- நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய்
- சிறிது சாட் மசாலா மற்றும் சீரகத்தூள்
- சுவைக்கு மாதுளை முத்துக்கள் மற்றும் மல்லித்தழை
செய்முறை: ஒரு கிண்ணத்தில் தயிரை நன்றாகக் கடைந்து கொள்ளவும். அதில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும். கடைசியாக பூந்தியைச் சேர்த்து மாதுளை தூவிப் பரிமாறினால், சுவையான மற்றும் ஆரோக்கியமான சம்மர் ஸ்நாக்ஸ் தயார்!

0 Comments
No comments yet. Be the first to comment.