TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவா? போலீசார் சம்மன்!

Share This Article:

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவா? போலீசார் சம்மன்!

கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அருள் விக்னேஷ் தனது செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆட்சியரின் வீட்டிற்குச் சென்று மது போதையில் தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்திருந்தார்


இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, நியாயமான விசாரணை நடத்தி நடவடிக்கை தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு அறிவுறுத்தியது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கும், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி. காமினியும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இந்தச் சூழலில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அருள் விக்னேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை அவர் ராஜினாமா செய்யலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ராஜினாமா குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions