துரந்தர் - தி ரிவெஞ்ச்: ரூ. 155 கோடி ஓ.டி.டி டீல்! ரன்வீர் சிங் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 'மேக்கிங் வீடியோ' சர்ப்ரைஸ்!
ரன்வீர் சிங் மற்றும் இயக்குநர் ஆதித்யா தார் கூட்டணியில் உருவான 'துரந்தர்' படத்தின் இரண்டாம் பாகம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ரூ. 155 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. அத்துடன் படத்தின் பிரத்யேக மேக்கிங் வீடியோக்களும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி-க்கு வரும் துரந்தர்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஆதித்யா தார் கூட்டணியில் உருவான ஸ்பை த்ரில்லர் திரைப்படங்கள் 'துரந்தர்' மற்றும் 'துந்தர் தி ரிவெஞ்ச்'. அதிரடி ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனைகளைப் படைத்தது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' டிஜிட்டல் தளத்தில் வெளியாகத் தயாராகி வருகிறது.
ரூ. 155 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தம்
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'துரந்தர் 2' படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளம் சுமார் ரூ. 155 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு இந்தித் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் பெற்ற மிக அதிகபட்ச தொகைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) தளத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கண்டிராத மேக்கிங் காட்சிகள்!
படம் ஓ.டி.டி-யில் வெளியாவதற்கு முன்பாக, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தின் 'மேக்கிங் வீடியோக்களை' (Behind the Scenes) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தத்ரூபமான சாகசக் காட்சிகள் எவ்வாறு படமாக்கப்பட்டன, படத்தின் தீவிரமான திரைக்கதை விவாதங்கள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான தருணங்கள் ஆகியவை இந்த வீடியோவில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
ரிலீஸ் எப்போது?
ரசிகர்கள் இந்தப் படத்தை ஓ.டி.டி-யில் காண ஆவலாக இருந்தாலும், அதற்காக இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஐ.பி.எல். (IPL) 2026 சீசன் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, 'துரந்தர் தி ரிவெஞ்ச்' ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments
No comments yet. Be the first to comment.