TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தேர்தல் முடிந்தது.. ஜனநாயகன் படத்திற்கு இன்று சென்சார் கிடைக்குமா? தனுஷ், சூர்யா படங்களுக்கு சிக்கலா?

Share This Article:

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கான சென்சார் சான்றிதழ் இன்று கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் தனுஷின் ‘கர’ மற்றும் சூர்யாவின் ‘கருப்பு’ ஆகிய படங்களின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் முடிந்தது.. ஜனநாயகன் படத்திற்கு இன்று சென்சார் கிடைக்குமா? தனுஷ், சூர்யா படங்களுக்கு சிக்கலா?

ஜனநாயகன் படத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம், அரசியல் காரணங்களாலும், சென்சார் போர்டுடனான சட்டப் போராட்டங்களாலும் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கிறது. கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டிய இப்படம், தேர்தல் நடத்தை விதிகளால் தள்ளிப்போனது. தற்போது ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் முடிந்துவிட்டதால், இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இப்படத்திற்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படுமா என்ற ஆவல் அதிகரித்துள்ளது.



Content image

லீக் ஆன படத்திற்கு கிடைக்குமா நீதி?

முழுத் திரைப்படமும் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதே படக்குழுவின் ஒரே இலக்காக உள்ளது. இன்று சான்றிதழ் கிடைக்காவிட்டால், மீண்டும் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Content image

தனுஷ், சூர்யா படங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்

ஜனநாயகன் படம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ரிலீஸாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நாளில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடித்துள்ள 'கர' (Kara) திரைப்படம் வெளியாக உள்ளது. ஒருவேளை விஜய் படம் அதே தேதியில் வந்தால், தனுஷ் படத்திற்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.


அதேபோல், சென்சார் தாமதமானால் மே 14-ஆம் தேதி சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) படத்துடன் ஜனநாயகன் மோதக்கூடும். ஏற்கனவே லீக் ஆன காரணத்தால் படத்தின் வசூல் பாதிக்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்த மோதல்கள் மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன.

Content image

ரீ-ரிலீஸ் ரேஸில் சிவகாசி vs அமர்க்களம்

புதிய படங்களின் ரிலீஸ் ஒருபுறம் இருக்க, இன்று (ஏப்ரல் 24) விஜய்யின் 'சிவகாசி' மற்றும் அஜித்தின் 'அமர்க்களம்' ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு அரசியல் வசனங்கள் நிறைந்த 'சிவகாசி' படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், அஜித் ரசிகர்கள் 'அமர்க்களம்' படத்தை வரவேற்றுத் திரையரங்குகளைத் திருவிழாவாக மாற்றி வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions