கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? ஒரே நேரத்தில் மிருணாள் தாக்கூர் - பூஜா ஹெக்டே கொடுத்த முத்தம்: வைரலாகும் வருண் தவான் போ
பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ள 'Hai Jawani Toh Ishq Hona Hai' படத்தில், பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் ஒரே நேரத்தில் அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பாலிவுட்டின் 'லக்கி' மேன் வருண் தவான்!
பாலிவுட் திரையுலகில் இப்போதைக்கு செம ஹேப்பியாக இருக்கும் நடிகர் என்றால் அது வருண் தவான் தான். அதற்கு முக்கிய காரணம், மே மாதம் வெளியாகவுள்ள அவரது புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தென்னிந்திய மற்றும் பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் நாயகிகளான பூஜா ஹெக்டே மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர்.
இணையத்தை அதிரவைக்கும் ஃபர்ஸ்ட் லுக்
சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரில், இரு நாயகிகளையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் வருண் தவானைப் பார்த்து பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து ரசிகர்களும் பொறாமையில் உள்ளனர். தற்போது அதனை விட ஒரு படி மேலே போய், பூஜா மற்றும் மிருணாள் இருவரும் ஒரே நேரத்தில் வருண் தவானுக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது
'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' மொமெண்ட்
தமிழில் பிரசாந்தை வைத்து அவர் தந்தை தியாகராஜன் படம் இயக்குவது போல, வருண் தவானை வைத்து அவரது தந்தை டேவிட் தவான் இப்படத்தை இயக்கியுள்ளார். 'வல்லவன்' படத்தில் சிம்பு நயன்தாரா மற்றும் ரீமா சென்னுடன் கலக்கியது போல, இப்படத்தில் வருண் தவான் இரண்டு நாயகிகளுடன் செம குஷியாக நடித்துள்ளார்.
குறிப்பு: இப்படத்தின் பெயர் 'Hai Jawani Toh Ishq Hona Hai'. இது வரும் மே 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கம்பேக் கொடுப்பாரா வருண்?
அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபியுடன் வருண் நடித்த 'பேபி ஜான்' (தெறி ரீமேக்) மற்றும் அவரது முந்தைய படமான 'பார்டர் 2' ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், இந்த பக்கா கமர்ஷியல் ரொமாண்டிக் படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்றும், வருண் தவானுக்கு ஒரு வலுவான வெற்றியைத் தேடித்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.