TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"அன்னைக்கே என்னை க்ளோஸ் பண்ணிருப்பார்!" - பாக்யராஜ் குறித்து ராதிகா பகிர்ந்த அதிரடி ரகசியம்!

Share This Article:

திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இயக்கத்தில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு விபரீத அனுபவம் குறித்தும், அவர் தன்னை எப்படிக் காப்பாற்றினார் (அல்லது சிக்க வைத்தார்!) என்பது குறித்தும் நடிகை ராதிகா பகிர்ந்த சுவாரசியமான தகவல் வைரலாகி வருகிறது.

"அன்னைக்கே என்னை க்ளோஸ் பண்ணிருப்பார்!" - பாக்யராஜ் குறித்து ராதிகா பகிர்ந்த அதிரடி ரகசியம்!

இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படுபவர் கே. பாக்யராஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பாசறைலிருந்து உருவான இவர், தனது தனித்துவமான வசனங்கள் மற்றும் யதார்த்தமான திரைக்கதை மூலம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை முத்திரை பதித்தவர். பார்த்திபன், லிவிங்ஸ்டன் போன்ற முன்னணி இயக்குனர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

Content image

ராதிகா - பாக்யராஜ் நட்பு

பாக்யராஜும், நடிகை ராதிகாவும் திரையில் சிறந்த ஜோடிகளாகவும், நிஜ வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பர்களாகவும் விளங்குபவர்கள். பாக்யராஜ் இயக்கிய பல ஹிட் படங்களில் ராதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணையும் மேடைகளில் எப்போதுமே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. ராதிகா ஆங்கிலத்தில் திட்டினால், "எனக்குதான் ஆங்கிலம் தெரியாதே, நீ என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்" என்று பாக்யராஜ் கிண்டலாகப் பதிலளிக்கும் அளவிற்கு இவர்களது நட்பு ஆழமானது.

Content image

கோவாவில் நடந்த அந்த பயங்கர சம்பவம்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ராதிகா, பாக்யராஜுடன் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட ஒரு மரண பய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கோவாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது, பாக்யராஜ் பைக் ஓட்ட ராதிகா பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.


அப்போது திடீரென பாக்யராஜ், "ஏய் புள்ள முன்னாடி என்ன வருதுன்னு பாரு!" என்று கத்தியுள்ளார். ராதிகா அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தபோது, ஒரு லாரி இவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

Content image

"அன்னைக்கே என்னை க்ளோஸ் பண்ணிருப்பார்!"

அந்த இக்கட்டான சூழலில் பதறிப்போன ராதிகா, "அடப்பாவி கண்ணு தெரியாதா? வண்டிய நிறுத்து!" என்று கத்திவிட்டு, பைக்கை நிறுத்தியவுடன் கீழே இறங்கிவிட்டாராம். இது குறித்து கிண்டலாகப் பேசிய ராதிகா, "நல்லவேளை நான் இறங்கிவிட்டேன், இல்லையென்றால் அன்னைக்கே என்னை அவர் க்ளோஸ் செய்திருப்பார்" என்று சிரித்துக்கொண்டே கூறினார். இந்த சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions