TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பட வாய்ப்பு இல்லையென்றாலும் கல்லா கட்டும் நடிகை நேகா சர்மா! இன்ஸ்டாகிராம் மூலம் மாதம் ரூ.7 லட்சம் வருமானம்!

Share This Article:

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராமல், இன்ஸ்டாகிராம் சந்தா திட்டம் (Subscription Model) மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் நடிகை நேகா சர்மாவின் புதிய பிசினஸ் ஐடியா குறித்த தொகுப்பு.

பட வாய்ப்பு இல்லையென்றாலும் கல்லா கட்டும் நடிகை நேகா சர்மா! இன்ஸ்டாகிராம் மூலம் மாதம் ரூ.7 லட்சம் வருமானம்!

திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தால் மட்டுமே கோடிகளில் சம்பாதிக்க முடியும் என்ற நிலை தற்போது மாறிவிட்டது. சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், திறமையும் புத்திசாலித்தனமும் இருந்தால் வீட்டிலிருந்தே லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் நடிகை நேகா சர்மா.

Content image

திரைப்பயணம்

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட் வரை சென்றவர் நேகா சர்மா. தமிழில் விஜய் சேதுபதியுடன் 'ஜூங்கா' மற்றும் துல்கர் சல்மானுடன் 'சோலோ' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். 38 வயதான இவர் அடிப்படையில் ஒரு காஸ்ட்யூம் டிசைனர் என்பதால், ஃபேஷன் மற்றும் ஸ்டைலிங்கில் தனி முத்திரை பதித்து வருகிறார்.

Content image

வருமான ரகசியம்

தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், இன்ஸ்டாகிராமில் தனக்கிருக்கும் 21 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை மிகச் சரியாக பயன்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் தனது பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க 'சந்தா திட்டம்' (Subscription Plan) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு மாதம் 290 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Content image

மாத வருமானம்

தகவல்களின்படி, இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 2,400 ரசிகர்கள் இணைந்துள்ளனர். இதன் மூலம் நேகா சர்மாவுக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஒரு முன்னணி நடிகை ஒரு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்திற்கு நிகராக, எந்தவித படப்பிடிப்பும் இன்றி நேகா சர்மா சமூக வலைதளங்கள் மூலம் வருமானம் ஈட்டி வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions