TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்; இனி மக்கள் நலனுக்காகச் சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்!" - தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி அறிக்கை

Share This Article:

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாகவும், வரும் காலங்களில் மக்கள் நலனுக்காகச் சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

"மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்; இனி மக்கள் நலனுக்காகச் சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்!" - தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி அறிக்கை

மக்களின் தீர்ப்பு மகத்தானது ஸ்டாலின் வாழ்த்து

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாண்டு கால சாதனைகளும், மக்கள் நலனும்

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் தி.மு.க. அரசு (மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி) மேற்கொண்ட திட்டங்களை நினைவு கூர்ந்த அவர், "கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான முன்னோடித் திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்திலும் எங்களது சாதனைகளைச் சொல்லியே மக்களிடம் வாக்கு கேட்டோம்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Content image

வாக்களித்த மற்றும் வாக்களிக்க மறந்தவர்களுக்கான ஆட்சி

தனது அறிக்கையில் மிகவும் உருக்கமான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ள ஸ்டாலின், "வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்தே நான் ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன், எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். எனது சக்திக்கு மீறி தமிழக மக்களுக்காக உழைத்தேன்" என்று கூறினார்.

Content image

களப்பணியாளர்களுக்கும் கூட்டணித் தலைவர்களுக்கும் நன்றி

வெற்றி தோல்வியைக் கடந்து களத்தில் நின்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், "தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள், உயிரோடு கலந்திருக்கும் தொண்டர்கள் மற்றும் எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

இலட்சியமே முக்கியம் தொடரும் அரசியல் பயணம்

அரசியல் வாழ்வில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "வெற்றி தோல்விகள் நிரந்தரமல்ல, இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியம். எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., இனி சட்டப்பேரவையில் மக்களின் குரலாகச் சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions