TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"அப்போ புரியல, இப்போ புரியுது!" - ரஜினி - ஸ்டாலின் சந்திப்பு குறித்து நடிகை கஸ்தூரியின் அதிரடி பதிவு! விஜய்க்கு குவியும் சிக்கல்?

Share This Article:

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், ரஜினி - ஸ்டாலின் சந்திப்பு மற்றும் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சி குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

"அப்போ புரியல, இப்போ புரியுது!" - ரஜினி - ஸ்டாலின் சந்திப்பு குறித்து நடிகை கஸ்தூரியின் அதிரடி பதிவு! விஜய்க்கு குவியும் சிக்கல்?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் தவித்து வருகிறது.

Content image

ரஜினி - ஸ்டாலின் திடீர் சந்திப்பு

இந்த இக்கட்டான சூழலில், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனச் சொல்லப்பட்டாலும், "தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டாலும் எனது ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு" என ரஜினி ஸ்டாலினிடம் உறுதியளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


விஜய்க்கு செக்? திமுக - அதிமுக கூட்டணி வதந்தி

விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்க, பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக நேற்று இரவு ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இருப்பினும், அத்தகைய பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை என திமுக தரப்பு உடனடியாக மறுப்பு தெரிவித்தது. ரஜினியின் சந்திப்பு இதற்குப் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகமும் ஒருபுறம் எழுப்பப்படுகிறது.

Content image

"அப்போ புரியல.. இப்போ புரியுது" - கஸ்தூரி காட்டம்

இந்த ஒட்டுமொத்த அரசியல் நகர்வுகளையும் கவனித்து வரும் நடிகை கஸ்தூரி, தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், "அப்போ புரியல, இப்போ புரியது!" எனப் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் ஏன் இப்போது ஸ்டாலினைச் சந்தித்தார் என்பதையும், விஜய்யின் அரசியல் வருகையைத் தடுக்கப் பின்னணியில் நடக்கும் வேலைகளையும் சூசகமாகச் சுட்டிக்காட்டியே அவர் இப்படிப் பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


 முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்?

ஒருபுறம் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவைத் திரட்ட விஜய் தீவிரமாக முயன்று வரும் நிலையில், மூத்த அரசியல் தலைவர்களின் இந்த அதிரடி மாற்றங்கள் TVK-வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது. விஜய்யால் 118 என்ற மந்திர எண்ணைத் தொட்டு அரியணை ஏற முடியுமா அல்லது இந்த அரசியல் சதுரங்கத்தில் பின்னடைவைச் சந்திப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions