TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சவரனுக்கு 400 ரூபாய் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி! (மே 11 நிலவரம்)

Share This Article:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

சவரனுக்கு 400 ரூபாய் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி! (மே 11 நிலவரம்)

வாரத்தின் முதல் நாளான இன்று (மே 11) தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்கும் மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் சரிந்துள்ளது.


சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு 50 ரூபாய் குறைந்து, 14,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை 400 ரூபாய் சரிந்து, 1,12,800 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களாக 1.13 லட்சத்திற்கு மேல் இருந்த சவரன் விலை இன்று குறைந்துள்ளது.


அதேபோல, 24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. 24 காரட் தூய தங்கம் ஒரு கிராமிற்கு 55 ரூபாய் குறைந்து 15,382 ரூபாய்க்கும், ஒரு சவரன் (8 கிராம்) 1,23,056 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.


தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் அதிகரித்து 285 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 5,000 ரூபாய் உயர்ந்து 2,85,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions