TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

விஜய்யை விட வைரலான த்ரிஷா! தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் ட்ரெண்டாகும் அந்த 'ஊதா' புடவை: விலை இவ்வளவு லட்சமா?

Share This Article:

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில், நடிகை த்ரிஷா அணிந்து வந்த ஊதா நிற பட்டுப் புடவை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதன் பிராண்ட் மற்றும் விலை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே.

விஜய்யை விட வைரலான த்ரிஷா! தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் ட்ரெண்டாகும் அந்த 'ஊதா' புடவை: விலை இவ்வளவு லட்சமா?

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மே 10ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பிரம்மாண்ட விழாவில் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இருப்பினும், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது நடிகை த்ரிஷாவின் வருகைதான். கறுப்பு நிற சூட்டில் விஜய் கம்பீரமாகத் தெரிந்தாலும், அவருக்கு இணையாக த்ரிஷாவின் லுக் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.


வைரலாகும் ஊதா நிற பட்டுப் புடவை

விழாவிற்கு த்ரிஷா இளஞ்சிவப்பு கலந்த ஊதா (Light Purple/Lavender) நிறத்திலான தூய பட்டுப் புடவையை அணிந்து வந்திருந்தார். தலையில் மல்லிகைப்பூ, பாரம்பரிய ஆபரணங்கள் என மிக எளிமையாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் அவர் காட்சியளித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. ஏற்கனவே '96' படத்தில் அவர் அணிந்த மஞ்சள் நிற குர்தா (Janu Look) ட்ரெண்டானது போல, தற்போது இந்த ஊதா புடவை பெண்களின் புதிய ஃபேஷன் தேடலாக மாறியுள்ளது.

Content image

டவையின் விலை எவ்வளவு?

சமூவலைதளங்களில் இந்த புடவை குறித்து தேடியபோது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன:

  • வகை: இது ஒரு கைத்தறி பட்டுப் புடவை (Pure Handloom Silk).
  • விலை: இதன் ஆரம்ப விலை 40 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, வேலைப்பாடுகளுக்கு ஏற்ப 1 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
  • ஆன்லைன் தேடல்: "Trisha Inauguration Look" என்ற பெயரில் இதே போன்ற நிறம் மற்றும் டிசைன் கொண்ட புடவைகளை பெண்கள் தற்போது ஆன்லைனில் அதிகளவில் தேடி வருகின்றனர்.



அரசியல் வருகையா?

த்ரிஷா இந்த விழாவில் கலந்துகொண்டது வெறும் நட்பின் அடிப்படையிலா அல்லது அவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற விவாதமும் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, விஜய் பதவியேற்கும்போது த்ரிஷா உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions