TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

“லட்சியமும் செயலும் சேர்ந்தால் எதுவும் சாத்தியம்!” – தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சி வாழ்த்து!

Share This Article:

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, ‘முதல்வன்’ பட இயக்குநர் ஷங்கர், “நிஜத்திலும் இது சாத்தியம் என நிரூபித்துவிட்டீர்கள்” என நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“லட்சியமும் செயலும் சேர்ந்தால் எதுவும் சாத்தியம்!” – தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சி வாழ்த்து!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இந்த இலக்கை எட்டியுள்ள விஜய்க்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

பதவியேற்பைத் தொடர்ந்து, இன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். மொத்தம் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, தவெக அரசு தனது பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விஜய்யின் அரசியல் பயணம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

Content image

‘முதல்வன்’ இயக்குநர் ஷங்கரின் பாராட்டு

இந்நிலையில், விஜய்யின் அரசியல் வெற்றியைப் பாராட்டிப் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

"இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் விஜய்-க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்."


Content image

மக்களின் விருப்பம்

மேலும் தனது பதிவில், "மக்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. ஒரு மாஸ் தொடக்கத்தோடு உங்கள் பயணம் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் பிரதர்!" என ஷங்கர் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். நிஜ வாழ்க்கையில் ஒரு 'முதல்வன்' உருவாகியிருப்பதாக ரசிகர்கள் இந்த வாழ்த்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions