TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

“ஒரு அண்ணனா சொல்றேன், இந்த வயசை மிஸ் பண்ணாதீங்க!”: கேரளாவில் சூர்யா உருக்கம்!

Share This Article:

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் மே 14 வெளியாகவுள்ள நிலையில், கேரளாவில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு சூர்யா நெகிழ்ச்சியான அறிவுரை வழங்கினார்.

“ஒரு அண்ணனா சொல்றேன், இந்த வயசை மிஸ் பண்ணாதீங்க!”: கேரளாவில் சூர்யா உருக்கம்!

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருப்பு'. இப்படம் நாளை (மே 14) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையொட்டி, படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று (மே 12) கேரளாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரசிகர்களிடையே உரையாற்றினார்.


வித்தியாசமான சூர்யா

நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மாற்றமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். அவர் பேசுகையில்:

"கடந்த 5 ஆண்டுகளில் நான் நடித்த படங்களிலிருந்து இது மிகவும் வித்தியாசமான படம். முதல் பாதி உணர்ச்சிப்பூர்வமான (Emotional) பயணமாக இருக்கும். இரண்டாம் பாதி முழுக்க தியேட்டர் மொமென்ட்டுகளால் (Theatre Moments) நிரம்பி இருக்கும்.


Content image

ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை

தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு ஒரு அண்ணனாக உருக்கமான அறிவுரை ஒன்றையும் சூர்யா வழங்கினார். "நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நானும் நீங்கள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு அண்ணனாக சொல்கிறேன், இந்த வயதை மிஸ் பண்ணாதீர்கள். பெரிய கனவு காணுங்கள், எல்லாமே நிச்சயம் நனவாகும்" என்று உற்சாகப்படுத்தினார்.

Content image

நட்சத்திர பட்டாளம்

இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யாவின் ஒரு முழுநீள எமோஷனல் மற்றும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions