புதுக்கோட்டையில் அ.தி.மு.க-வினர் இடையே மோதல்: கட்சி அலுவலக பூட்டை உடைக்க முயற்சி - விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மறியல்!
புதுக்கோட்டையில் அ.தி.மு.க புதிய மாவட்டச் செயலாளர் பழனிவேல் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது, சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சி அலுவலகத்தில் பரபரப்பு: புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இன்று புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பழனிவேல், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டார். இதற்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.
பூட்டை உடைக்க முயற்சி: அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏற்கனவே கட்சி அலுவலகம் காவல்துறையினரால் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், பழனிவேல் தரப்பினர் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் சூழல் உருவானது.
போலீசார் குவிப்பு: தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தடுக்க கட்சி அலுவலகத்தைச் சுற்றி ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயபாஸ்கர் ஆதரவாளர்களின் தொடர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.