TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTT-யில் வெளியான புதுப்படங்கள், வெப் சீரிஸ்கள் முழு விவரம்!

Share This Article:

இந்த வார வாரயிறுதி நாட்களைக் கொண்டாட தியேட்டர்கள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கும் சூர்யாவின் 'கருப்பு', டொவினோ தாமஸின் 'அதிரடி' உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் முழுமையான தொகுப்பு இதோ!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTT-யில் வெளியான புதுப்படங்கள், வெப் சீரிஸ்கள் முழு விவரம்!

வழக்கம்போல இந்த வார இறுதியிலும் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் பல சுவாரசியமான திரைப்படங்களும், தொடர்களும் வெளியாகியுள்ளன. சூர்யாவின் பிரம்மாண்ட வெளியீடான 'கருப்பு' முதல் ஹாலிவுட்டின் 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' வரை, நீங்கள் இந்த வாரம் தவறவிடக்கூடாத படங்களின் பட்டியல் இதோ.



Content image

கருப்பு (தமிழ்)

  • இயக்கம்: ஆர்.ஜே. பாலாஜி
  • நடிப்பு: சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி.
  • விவரம்: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா - த்ரிஷா கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருக்கும் மாஸ் கமர்ஷியல் ஆக்சன் மற்றும் கிராமத்து பின்னணி கொண்ட திரைப்படம் 'கருப்பு'. பல கட்ட ரிலீஸ் சிக்கல்களைத் தாண்டி மே 15 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


Content image

சட்டென்று மாறுது வானிலை (தமிழ்)

  • இயக்கம் & தயாரிப்பு: பாபு விஜய்
  • நடிப்பு: ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, ஆதித்யா கதிர், ராமச்சந்திர ராஜு, ஸ்ரீமன், சத்யன்.
  • விவரம்: நடிகர் ஜெய் நடிப்பில் காமெடி மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகியுள்ள 'சட்டென்று மாறுது வானிலை' திரைப்படம் நேற்று (மே 15) தியேட்டர்களில் வெளியானது.

அதிரடி (மலையாளம்)

  • இயக்கம்: அருண் அனிருதன் ('மின்னல் முரளி' பட எழுத்தாளர்)
  • நடிப்பு: பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு.
  • விவரம்: ஒரு கல்லூரியின் தடை செய்யப்பட்ட திருவிழாவை மீண்டும் நடத்த முயலும் மாணவர்களுக்கும், உள்ளூர் ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாகக் கொண்ட மாஸ் கேம்பஸ் ஆக்சன் டிராமா. இத்திரைப்படம் கடந்த மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.


Content image

பதி பத்னி அவுர் வோ தோ (இந்தி)

  • இயக்கம்: முதாஸர் அஜீஸ்
  • நடிப்பு: ஆயுஷ்மான் குரானா, வாமிகா கப்பி, ரகுல் ப்ரீத் சிங்.
  • விவரம்: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகியுள்ள இந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம் மே 15 முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

 ஆக்ரி சவால் (இந்தி)

  • இயக்கம்: அபிஜீத் வாராங்
  • நடிப்பு: சஞ்சய் தத், நமாஷி சக்ரவர்த்தி, நீது சந்திரா ஸ்ரீவாஸ்தவா, அமித் சாத், சமீரா ரெட்டி.
  • விவரம்: சஞ்சய் தத்தின் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள ஒரு க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியானது.



Content image

OTT Releases (இந்த வார ஓடிடி ரிலீஸ்)

இந்த வாரம் முன்னணி ஓடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தளங்களில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்களின் பட்டியல்:

1 ப்ராஜெக்ட் ஹெயில் மேரி (Project Hail Mary)-Amazon Prime Video,2 ஆஃப் கேம்பஸ் (Off Campus)-Amazon Prime Video,3 குட் ஓமன்ஸ் - சீசன் (Good Omens Season 3)-Amazon Prime Video,4 இன்ஸ்பெக்டர் அவிநாஷ் - சீசன் 2 (Inspector Avinash Season 2)-JioHotstar,5 தி பனிஷர்: ஒன் லாஸ்ட் கில் (The Punisher: One Last Kill)-JioHotstar,6 துரந்தர் 2: தி ரிவெஞ்ச் (Dhurandhar 2: The Revenge)-Netflix (இந்தியாவில் JioHotstar-லும் கிடைக்கும்),7 கர்த்தவ்யா (Kartavya)-Netflix,8 பெர்லின் அண்ட் தி லேடி வித் அன்எர்மைன் (Berlin and the Lady with an Ermine)-Netflix,9 நெமெசிஸ் (Nemesis)-Netflix


பிக்பாஸ், த்ரில்லர் சீரிஸ்கள் முதல் சூர்யாவின் மாஸ் தியேட்டர் ரிலீஸ் வரை இந்த வாரம் ரசிகர்களுக்குப் பல ஆப்ஷன்கள் காத்திருக்கின்றன. தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க விரும்புபவர்கள் 'கருப்பு' மற்றும் 'அதிரடி' படங்களையும், வீட்டில் இருந்தபடியே பார்க்க நினைப்பவர்கள் 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி', 'துரந்தர் 2' போன்ற படங்களையும் தேர்வு செய்து இந்த வார இறுதியை மகிழ்வோடு கொண்டாடுங்கள்!

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions