TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மீண்டும் குஸ்தி கோதாவில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி: 'கட்டா குஸ்தி 2' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Share This Article:

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக தயாராகி வருகிறது. செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்து நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' (Gatta Kusthi 2) திரைப்படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்து, திரைப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி (July 3, 2026) திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காமெடி பிளஸ் ஃபேமிலி என்டர்டெய்னர்: முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் முடிவில் இருந்து இந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவிக்கு இடையேயான சுவாரசியமான குடும்பப் பிரச்சினைகளை, மல்யுத்த விளையாட்டின் பின்னணியில் மீண்டும் ஒரு பக்கா கமர்ஷியல் காமெடி என்டர்டெய்னராக இயக்குனர் செல்லா அய்யாவு உருவாக்கியுள்ளார்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இந்த முறை ஷான் ரோல்டன் (Sean Roldan) இசையமைத்துள்ளார். மேலும், முதல் பாகத்தில் ரசிக்க வைத்த கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் கஜராஜ் ஆகியோரும் இந்த சீக்வலிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜூலை 3 ரிலீஸ் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions