சிஎஸ்கே அணியில் தோனியின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? ஓய்வு எப்போது என்பதையும் தாண்டி எழும் கேள்விகள்
"இப்போதைக்கு நீங்கள் ஓய்வு பெற்றுவிடாதீர்கள். முன்பு 'நிச்சயமாக இல்லை' (Definitely Not) என்று சொன்னதுபோல் இனியும் தொடர்ந்து சொல்லுங்கள். நீங்கள் 60 வயது வரையிலும் கூட விளையாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்"
சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் மஹேந்திர சிங் தோனியிடம் இப்படிக் கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன்.
அதற்கு சிரித்துக்கொண்டே "முயற்சி செய்கிறேன்" என்றார் தோனி.
19-வது ஐபிஎல் தொடரில் விளையாடப்போகும் தோனிக்கு தற்போது 45 வயது ஆகிறது. இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் அவர் விளையாடியுள்ளார். சர்வதேச போட்டிகளில் கடைசியாக ஆறரை ஆண்டுகளுக்கு முன் விளையாடியிருந்தாலும், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டுவந்தாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

0 Comments
No comments yet. Be the first to comment.