முதலமைச்சர் ஆலோசனை..! தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது மற்றும் புதிய கல்வி ஆண்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் கோடை விடுமுறை முடிவடையும் நிலையை ஒட்டி, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
நடப்பு கல்வி ஆண்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை எப்போது திறக்கலாம், வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நா அன்றே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்படும் அதிகாரப்பூர்வ தேதி மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசின் இந்த சுறுசுறுப்பான நடவடிக்கைகள் பொதுமக்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

0 Comments
No comments yet. Be the first to comment.