TBC News
கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மகளிருக்கு ரூ.2,500, இலவச பேருந்து பயணம் எப்போது? தவெக அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி பதில்!

Share This Article:

தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் மற்றும் அனைத்து பேருந்துகளிலும் இலவச விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும் என்பது குறித்து தவெக மூத்த நிர்வாகியும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கோவையில் விளக்கம் அளித்துள்ளார்.

மகளிருக்கு ரூ.2,500, இலவச பேருந்து பயணம் எப்போது? தவெக அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி பதில்!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் திட்டம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் இலவச விடியல் பயணம் திட்டம் ஆகியவை எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முக்கிய விளக்கமளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

அமைச்சரின் உடல்நிலை குறித்து

கடந்த இரண்டு நாட்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செங்கோட்டையன், பரிசோதனைகள் முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை கிளம்பும் முன்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். ஆண்டுக்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். கடந்த 8 மாதங்களாக கடுமையான உழைப்பு காரணமாக அதைச் செய்ய முடியவில்லை. அதனால் தற்போது தங்கி பரிசோதனை செய்துகொண்டேன். இது என் உறவினரின் மருத்துவமனை என்பதால் இங்கேயே எப்போதும் சிகிச்சை பெறுவேன்" என்று விளக்கமளித்தார்.

Content image

மகளிர் திட்டங்கள் குறித்து கேள்வி-பதில்

செய்தியாளர்கள், "பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம் மற்றும் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் எப்போது அமலாகும்?" என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர்:

"கடந்த திமுக ஆட்சியில் இந்த திட்டங்கள் எப்படி வழங்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். எத்தனை வருடங்கள் கழித்துக் கொடுத்தார்கள்? எனவே, தமிழக அரசின் நிதி நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும். இது முதல்வர் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இந்த கேள்வியை என்னிடத்தில் கேட்பது சரியாக இருக்காது. முதல்வர் விஜய் அவர்கள், எந்தெந்த கால கட்டங்களில் எந்தெந்த திட்டங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தக்க நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பார்" — அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தவெக தனது தேர்தல் வாக்குறுதியில், மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், தற்போது அரசு நகர பேருந்துகளில் (Town Buses) மட்டுமே உள்ள மகளிர் இலவச பயண திட்டத்தை, அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி 'விடியல் பயணம்' என்ற பெயரில் வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இதனால் இந்த திட்டங்கள் எப்போது தொடங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அமைச்சரின் இந்தப் பதில் வெளியாகியுள்ளது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions