TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

உதயநிதி கைது நியாயமான நடவடிக்கையே: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

Share This Article:

பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் திமுக அரசு பார்த்துக்கொண்டிருக்காது என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

உதயநிதி கைது நியாயமான நடவடிக்கையே: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும், அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும், சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லத்துக்கு இன்று காலை சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். அவரது கைது சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

Content image

சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பாக விளக்கம் அளித்தார். சட்டத்திற்கு உட்பட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டத்திற்கு வரக்கூடாது என நினைத்து உதயநிதி அவ்வாறு பேசியிருப்பார் என்றும், ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் அரசு அதை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் கூறினார். அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பெண்கள் குறித்து தவறாக பேசக்கூடாது

அரசியல் விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ, அவர்களுக்கு எதிராக தவறான கருத்துகளை தெரிவிக்கும் வகையிலோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அல்லது அவதூறான கருத்துகள் தொடர்பாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்டவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions