தமிழ்நாடு பட்ஜெட் 2026: பெண்களுக்கு அண்ணனின் சீர் முதல் தாய் கேர் வரை – முக்கிய திட்டங்கள் என்னென்ன?
தமிழ்நாடு பட்ஜெட் 2026-27ல் பெண்களின் திருமணம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அண்ணனின் சீர், தாய் கேர், ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் பெண்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.பெண்களின் பொருளாதார முன்னேற்றம், திருமண உதவி, மருத்துவ சேவை மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
அண்ணனின் சீர் திட்டம்
பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் ‘அண்ணனின் சீர்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
• திருமண நாளில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
• மணப்பெண்ணுக்கு பட்டுப் புடவை வழங்கப்படும்.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
• முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு வழங்கப்படும்.
• விவசாயம் சார்ந்த நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
• இத்திட்டத்திற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாய் கேர் திட்டம்
கருவுற்ற பெண்களுக்கான மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘தாய் கேர்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
• கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்.
• மகப்பேறு நாள் நெருங்கும் நேரத்தில் பெண்கள் இந்த மையங்களில் தங்கி பயன்பெறலாம்.
• கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.
• தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சுகாதார சேவைகள் வழங்கப்படும்.
• இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணனின் சீர் – திருமண உதவி
திருமணமாகும் பெண்களுக்கு நேரடியாக உதவும் வகையில் இந்தத் திட்டம் முக்கிய அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது.
• திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
• அதனுடன் பட்டுப் புடவையும் வழங்கப்படும்.
• திருமணச் செலவுகளால் குடும்பங்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்
வெற்றி மகளிர் ஆட்டோ வளர்ப்புத் திட்டம்
பெண்களுக்கு சுயதொழில் மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ‘வெற்றி மகளிர் ஆட்டோ வளர்ப்புத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
• 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்.
• கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பயன்பெறுவர்.
• மொத்தம் 30,000 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.
• பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சுயவருமானத்தை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும்.
கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
கிராமப்புற பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கறவை மாடுகள் வழங்கும் திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
• ஆண்டுதோறும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும்.
• கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்.
• பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
• இத்திட்டத்திற்காக ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
• பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை.
• கருவுற்ற பெண்களுக்காக மாநிலம் முழுவதும் ‘தாய் கேர்’ மையங்கள்.
• 30,000 பயனாளிகளுக்கு 100% மானியத்தில் தலா 5 ஆடுகள்.
• ஆண்டுதோறும் 10,000 தகுதியான பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்.
• சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு.

0 Comments
No comments yet. Be the first to comment.