TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

இனி டாஸ்மாக் வரிசைக்கு ‘Goodbye’! ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம் – எப்படி புக் செய்வது?

Share This Article:

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் மதுபான இருப்பை ஆன்லைனில் பார்த்து, பணம் செலுத்தி, உருவாகும் QR Code-ஐ தேர்வு செய்த டாஸ்மாக் கடையில் காண்பித்து ஆர்டரை பெற்றுக்கொள்ளலாம்

இனி டாஸ்மாக் வரிசைக்கு ‘Goodbye’! ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம் – எப்படி புக் செய்வது?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பது, கடைக்குச் சென்ற பிறகு விரும்பிய பிராண்ட் இருப்பில் இல்லை என்பதை அறிந்து ஏமாற்றமடைவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஆன்லைன் மதுபான முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் டாஸ்மாக் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளின் இருப்பை ஆன்லைனிலேயே சரிபார்த்து, முன்பதிவு செய்து, பணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட மதுபானத்தை தேர்வு செய்த டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். 

4,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு புதிய வசதி

தமிழகம் முழுவதும் செயல்படும் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்களை மையமாகக் கொண்டு இந்த புதிய டிஜிட்டல் முறை செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மதுபானம் வாங்குவதற்காக கடைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதைக் குறைப்பதுடன், தேவையான பிராண்ட் சம்பந்தப்பட்ட கடையில் இருக்கிறதா என்பதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான MRP-ஐ விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பான புகார்களை கட்டுப்படுத்துவதும் இந்த டிஜிட்டல் முறையின் நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

Content image

ஆன்லைனில் எப்படி ஆர்டர் செய்வது?

புதிய ஆன்லைன் முறையில் முதலில் பயனர் தனது வயது 21 அல்லது அதற்கு மேல் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் தேவையான டாஸ்மாக் விற்பனை நிலையத்தை தேர்வு செய்ய முடியும்.

கடையை தேர்வு செய்ததும் அந்த விற்பனை நிலையத்தில் தற்போது இருப்பில் உள்ள மதுபான வகைகள் இணையதளத்தில் காண்பிக்கப்படும். அதிலிருந்து தேவையானவற்றை தேர்வு செய்து Cart-ல் சேர்க்கலாம். பின்னர் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்ப்பு முடித்த பிறகு ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்டரை உறுதி செய்யலாம். 

5 கி.மீ. முதல் 25 கி.மீ. வரை கடைகளை தேடலாம்

வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு 5 கி.மீ. முதல் 25 கி.மீ. சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை தேட முடியும். அதேபோல் கடை எண் அல்லது மாவட்டத்தின் அடிப்படையிலும் குறிப்பிட்ட விற்பனை நிலையத்தை கண்டறிய முடியும்.

குறிப்பாக, இருப்பிடம் மட்டும் ஆர்டர் செய்வதற்கான தடையாக இருக்காது. உதாரணமாக சென்னையில் இருக்கும் ஒருவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை தேர்வு செய்து அங்கு கிடைக்கும் மதுபானத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்து பணம் செலுத்த முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆர்டர் செய்த மதுபானத்தை சம்பந்தப்பட்ட கடையில் நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்

Content image

QR Code மூலம் மதுபானம் பெறுவது எப்படி?

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்ததும் வாடிக்கையாளரின் ஆர்டருக்கான QR Code உருவாக்கப்படும். இந்த QR Code-ஐ தேர்வு செய்யப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பித்து, முன்பதிவு செய்த மதுபானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இதனால் கடைக்கு சென்று அங்கு கிடைக்கும் மதுபானங்களை தேடுவது, பணம் செலுத்துவதற்காக மீண்டும் காத்திருப்பது போன்ற நடைமுறைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு டெலிவரி கிடையாது

இந்த வசதி ஆன்லைன் மதுபான முன்பதிவுக்கானது என்றாலும், வீட்டிற்கே மதுபானத்தை டெலிவரி செய்யும் சேவை அல்ல. வாடிக்கையாளர் ஆன்லைனில் ஆர்டர் செய்து பணம் செலுத்திய பின்னர், தேர்வு செய்த டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று QR Code மூலம் மதுபானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 

Content image

டாஸ்மாக் விற்பனையில் புதிய டிஜிட்டல் மாற்றம்

நீண்ட வரிசை, மதுபான இருப்பு குறித்த குழப்பம் மற்றும் கூடுதல் விலை வசூல் தொடர்பான புகார்கள் போன்றவற்றை குறைக்கும் நோக்கில் இந்த ஆன்லைன் முன்பதிவு முறை முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக எந்த கடையில் எந்த மதுபானம் இருப்பில் உள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்து, பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions