TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

Share This Article:

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனத்தை பயன்படுத்த வேண்டாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வின்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், ஒரு அறிவிப்பு பொருளாதார பலன் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு ஓட்டுநர், எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்பு செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றும், அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளருக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Content image

கார் வேண்டாம்

இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வாகனம் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு கடும் நிதிச்சுமையில் இருப்பதால், அரசு அறிவித்த கார் திட்டத்தை திமுக எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசு பங்களா குறித்து கேள்வி

இதேபோல், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்றால், அரசு வழங்கும் வீடு உள்ளிட்ட சலுகைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அமைச்சருக்கு கார், வீடு மற்றும் நான்கு உதவியாளர்கள் வழங்கப்படுவதாகவும், எம்.எல்.ஏ.க்களுக்கு அதுபோன்ற வசதிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஒரு எம்.எல்.ஏ. மூன்று லட்சம் மக்களைச் சென்று பார்க்க வேண்டிய சூழலில் இருப்பதாகவும், அதனால் கார் வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions