TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நேபாள வெள்ளத்தில் பலியானவர்களுக்கு சென்னை பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

Share This Article:

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளி ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

நேபாள வெள்ளத்தில் பலியானவர்களுக்கு சென்னை பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, சென்னையில் பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி உருக்கமாக மௌன அஞ்சலி செலுத்தினர்.

நேபாளத்தில் பெருவெள்ளம்:

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாகப் பயங்கரப் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 469 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 977 பேரை இன்னும் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அங்கு சிக்கியிருந்தவர்களில் 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மேலும் 82 தமிழர்களைத் தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Content image

பள்ளி மாணவர்கள் அஞ்சலி:

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னை தியாகராயநகரில் (தி. நகர்) உள்ள புகழ்பெற்ற தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, வெள்ளத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும், காணாமல் போனவர்கள் நலம் பெற வேண்டியும் சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.




0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions