அஜித்தின் ரேசிங் அணிக்கு புதிய களம்.. மிச்செலின் லு மான்ஸ் கோப்பையில் பங்கேற்பு...
நடிகர் அஜித்குமார் தனது கார் பந்தய அணியுடன் இணைந்து சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெற உள்ள மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளார்.
அஜித் குமார் ரேசிங் அணி தற்போது சர்வதேச கார் பந்தய போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை தொடரில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்க உள்ளது.
சர்வதேச தொடரில் அஜித்
நடிகர் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து, கார் பந்தயத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது சர்வதேச கார் பந்தயங்களில் தனது அணியுடன் பங்கேற்று வருகிறார்.
அவரது சவால் நிறைந்த கார் ரேஸ் பயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கிராஸ் டேல்ஸ்’ என்ற ஆவணத் திரைப்படமும் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இதற்கிடையே, கார் ரேஸிங்கில் அடுத்த முக்கிய போட்டியாக மிச்செலின் லீ மான்ஸ் கோப்பையில் அஜித் குமார் ரேசிங் அணி களமிறங்குகிறது.
மிச்செலின் லீ மான்ஸ் தொடர்
கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டிகளில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றிருந்தது. தற்போது இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெற உள்ள 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்தப் போட்டியில் அஜித்தின் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
விபத்தை சந்தித்த அஜித்தின் கார்
முன்னதாக ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியின் போது, அஜித்தின் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
அஜித் காயமின்றி தப்பிய நிலையில், அவரது கார் பந்தயத்துக்கு தயார்படுத்தப்பட்டு மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், கார் பந்தயத்திலும் தனது ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
திரைப்படப் பணிகளுக்கு இடையே சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அவரது பயணம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.