TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!

Share This Article:

தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தக் கோரி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!

மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு:

"தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த விலைவாசி உயர்வால், சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அன்றாட குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வருமானம் அதிகரிக்காத தற்போதைய சூழ்நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்களின் குடும்பப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசின் கடமை:

குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கே செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதனை வெறும் சாதாரண விலை உயர்வாகப் பார்க்காமல், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரச்சினையாகக் கருத வேண்டும்.


Content image

அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களும் எந்தவித பொருளாதார நெருக்கடியும் இல்லாமல், நிம்மதியாகவும் கண்ணியமாகவும் நம் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்ற நிலையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

விலைவாசி உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.






0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions