TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

“என்னை காதல் கதையில் நடிக்க வைக்க யாருக்கும் தோன்றவில்லை!” – டாப்ஸி பன்னு

Share This Article:

தொடர்ந்து ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் கதைகளில் நடித்து வரும் டாப்ஸி பன்னு, இனி ரொமாண்டிக் காமெடி போன்ற லைட்டான கதாபாத்திரங்களிலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்

“என்னை காதல் கதையில் நடிக்க வைக்க யாருக்கும் தோன்றவில்லை!” – டாப்ஸி பன்னு

தமிழில் ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான டாப்ஸி பன்னு, தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் அழுத்தமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் அதிகமாக நடித்து வரும் அவர், ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மனதை கொள்ளை கொண்ட டாப்ஸி பன்னு

டாப்ஸி பன்னு தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி திரையுலகிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது அவரது நடிப்பில் ‘காந்தாரி’ என்ற திரில்லர் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பானி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள டாப்ஸி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வருகிறார். 

Content image

ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க ஆசை

‘பிங்க்’, ‘பத்லா’, ‘தப்பாட்’, ‘நாம் ஷபானா’ உள்ளிட்ட படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்த டாப்ஸி, இனி சற்று லைட்டான கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

“எனக்கு கொஞ்சம் லைட்டான கதாபாத்திரத்தை கொடுங்கள். ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வைக்காதீர்கள்!”

ஒரு நடிகர் குறிப்பிட்ட வகையான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டால், தொடர்ந்து அதே மாதிரியான கதாபாத்திரங்களையே அவர்களுக்கு வழங்கும் போக்கு திரையுலகில் இருப்பதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகரை குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களுக்குள் மட்டுமே அடைத்து விடுவது, திரையுலகின் படைப்பாற்றல் குறைபாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

Content image

மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு எதிர்பார்ப்பு

தன்னை காதல் கதாநாயகியாக கற்பனை செய்வது பலருக்கும் கடினமாக இருப்பதாக கூறிய டாப்ஸி, மன்மர்ஸியான் திரைப்படத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கேல் கேல் மெய்ன் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற மாறுபட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions