TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன – முதல்வர் விஜய்

Share This Article:

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன – முதல்வர் விஜய்

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

அனல் பறந்த சட்டசபை

தமிழக சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது மாநிலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு காவல்துறை முக்கிய அடித்தளமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், அதன் தாக்கம் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதால், அரசு ஊழியர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

போதைக்கு எதிரான நடவடிக்கைகள்

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்புக்காக மாநிலம் முழுவதும் 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதுடன், இளைஞர்களை போதையின் பிடியிலிருந்து மீட்பதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Content image

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மேலும், சிறப்பு அதிரடிப்படையினருக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இருசக்கர வாகனங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை அதிகரிப்பதே இந்தப் படையின் முக்கிய நோக்கமாகும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்தார்.

இதுவரை 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆயிரக்கணக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Content image

காவல் மரணங்களை தடுக்கும் நடவடிக்கைகள்

காவல் மரணம் என்பது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்லாமல், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினை என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.

காவலில் மரணம் ஏற்பட்டால் வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்றும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி மருத்துவ உடற்கூராய்வு மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

காவல்துறையில் இருப்பவர் தவறு செய்திருந்தாலும் அவருக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படாது; தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் சரியாகச் செய்யும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்தார்.

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்பு என்றும், அதற்காக தடுப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions