TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தள்ளிப்போகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Share This Article:

நானியின் ‘தி பாரடைஸ்’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு! ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட ஆக்‌ஷன் திரைப்படம் செப்டம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தள்ளிப்போகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

நானி நடிப்பில், ‘தசரா’ பட இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள ‘தி பாரடைஸ்’ (The Paradise) திரைப்படம் வரும் செப்டம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது. படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், புதிய போஸ்டர் மூலம் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

‘தசரா’ கூட்டணி மீண்டும்

2023-ல் வெளியான ‘தசரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் ‘தி பாரடைஸ்’. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். நானியுடன் கயாடு லோஹர், மோகன் பாபு, ராகவ் ஜுயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1980-களின் செகந்திராபாத் பின்னணி

1980-களின் செகந்திராபாத் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் போராட்டத்தையும், அவர்களை ஒன்றிணைத்து வழிநடத்தும் ஒருவரின் எழுச்சியையும் மையமாகக் கொண்டு ஆக்‌ஷன் கதையாக படம் உருவாகியுள்ளது. 

Content image

8 மொழிகளில் பிரம்மாண்ட வெளியீடு

‘தி பாரடைஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என 8 மொழிகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 24 வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவின் புதிய அறிவிப்பு தெரிவிக்கிறது.

ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

படத்தின் சில பணிகள் முடிவடையாததால் வெளியீடு தள்ளிப்போகலாம் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. ஆனால் தற்போது புதிய ரிலீஸ் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, செப்டம்பர் 24-ம் தேதியே படம் திரைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions