சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைந்த சீமான்
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். பால சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிராமத்து வாழ்வியலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் "சீமான்" படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதிகாரப்பூர்வமாக அவரது கதாபாத்திர விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

0 Comments
No comments yet. Be the first to comment.