TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யாவின் பின்னணி என்ன?

Share This Article:

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ்.சுகன்யாவும் தி.மு.க சார்பில் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யாவின் பின்னணி என்ன?

2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்:

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமன்:

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஐ.பரந்தாமன், பி.ஏ. பி.எல். படித்தவர். கட்சியின் சட்டத்துறை மாநில இணைச் செயலாளராக இருந்து வருகிறார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் தி.மு.க. சார்பில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருகிறார். இவர் ஏற்கனவே, கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முந்தைய தேர்தலில் (2016) பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், சுமார் 92 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.


Content image

மீண்டும் வாய்ப்பு:

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, எழும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலையீட்டின் காரணமாக இவருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தமிழன் பிரசன்னா களம் இறக்கப்பட்டு, அவர் த.வெ.க. வேட்பாளரும், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான ராஜ்மோகனிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில்தான், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாராபுரம் வேட்பாளர் சுகன்யா:

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.சுகன்யா, வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கட்சியில் ஒன்றிய அணி செயலாளராக உள்ள இவர்,தாராபுரம் தொகுதியை சேர்ந்தவர். உள்ளூர் அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருபவர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின்போதும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட இவர் விருப்பம் தெரிவித்து இருந்தபோதும் அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions