வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி, நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ உளமார வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ உளமார வாழ்த்துகிறேன்".
இவ்வாறு முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ வாழ்த்துப் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு சமூக நலத்திட்டங்களும், பல்வேறு கட்ட விழிப்புணர்வு மற்றும் சேவை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments
No comments yet. Be the first to comment.