TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சென்னை PVR VR மாலில் 1700 நாட்களை கடந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Share This Article:

சென்னை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம், சென்னை PVR VR மாலில் ரீ-ரிலீஸுக்குப் பிறகு தொடர்ந்து திரையிடப்பட்டு வரும் நிலையில், தற்போது 1700 நாட்களை கடந்துள்ளது.

சென்னை PVR VR மாலில் 1700 நாட்களை கடந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

2010ஆம் ஆண்டு வெளியான இந்த காதல் திரைப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களும் படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன. படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சென்னை PVR VR மாலில் படம் நீண்ட காலமாக திரையிடப்பட்டு வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2025ஆம் ஆண்டிலேயே படம் ரீ-ரிலீஸாகி 1,000 நாட்களை கடந்ததாக செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பால், இந்தப் படம் 1,300 நாட்களையும் கடந்ததாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம், பாடல்களுக்கு உற்சாகமான வரவேற்பு உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

Content image

இந்நிலையில், தற்போது 1700 நாட்களை கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் மீதான தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ரசிகர்கள் திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னை PVR VR மாலில் தினமும் மதியம் 12.20 மணிக்கு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் திரையிடப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம், ரீ-ரிலீஸ் மூலம் பல ஆண்டுகளாக ஒரே திரையரங்கில் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருவது தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நிகழ்வாகியுள்ளது. குறிப்பாக சிம்பு–திரிஷா ஜோடியின் கதாபாத்திரங்களும், படத்தின் இசையும் இன்றளவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions