TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 1,106 மோதிரங்கள் தயார்!!

Share This Article:

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு முதல் கட்டமாக 1,106 தங்க மோதிரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. செப்டம்பர் 28-ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், பயனாளிகளுக்கு மோதிரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 1,106 மோதிரங்கள் தயார்!!

தமிழ்நாடு அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு முதல் கட்டமாக 1,106 தங்க மோதிரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மோதிரங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Content image

மாநிலம் முழுவதும் இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் மற்றும் பாதுகாப்பு பேக்கேஜிங் வழங்கப்பட உள்ளது.

திட்டத்தின் கீழ் பயன்பெற, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண்ணை (RCHID) பெற்றிருக்க வேண்டும். செப்டம்பர் 28-ஆம் தேதி முதல், ஏற்கனவே பிறந்த குழந்தைகளுக்கான மோதிரங்கள் 107 மையங்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உசிலம்பட்டி பகுதியில் தாய்மாமன் சீர் வழங்கும் பாரம்பரியம் முக்கியத்துவம் பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு உசிலம்பட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions