TBC News
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை! பீகாரில் புதிய சரித்திரம்: முதல் முறையாக பாஜக-வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்பு! செங்கப்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள் கடல்: கோவை தேசிய நெடுஞ்சாலையை அதிரவைத்த விஜய்! தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,13,000-ஐ கடந்து புதிய உச்சம்! மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பு: வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் தீவிர பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"முத்துராமலிங்கம் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு" - மனம் திறந்த நடிகர் கௌதம் கார்த்திக்!

Share This Article:

நடிகர் கௌதம் கார்த்திக் தனது திரைப் பயணத்தில் 'முத்துராமலிங்கம்' படத்தில் நடித்தது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், போதிய புரிதல் இல்லாததால் அந்த முடிவை எடுத்ததாகவும் சமீபத்திய பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

"முத்துராமலிங்கம் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு" - மனம் திறந்த நடிகர் கௌதம் கார்த்திக்!

தமிழ் சினிமாவில் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். பல வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணத்தில் தான் செய்த தவறுகள் குறித்தும், தோல்வி அடைந்த படங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். குறிப்பாக 2017-ம் ஆண்டு வெளியான 'முத்துராமலிங்கம்' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, "முத்துராமலிங்கம் கதைக்காக நான் வருத்தப்படுகிறேன். என் பயணத்தின் மிகப்பெரிய தவறு அது. அறிவின்மையாலும் புரிதலற்ற தன்மையாலும் இப்படம் என் வாழ்க்கையிலும் தொழிலிலும் பெரிய தோல்வியாக அமைந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.


முத்துராமலிங்கம் படத்தின் தோல்விக்குப்பிறகு இது போன்ற கிராமத்து பாணி மற்றும் 'மாஸ்' கதைகளைத் தவிர்த்து வந்ததாகக் குறிப்பிட்ட கௌதம் கார்த்திக், மீண்டும் ஒரு முயற்சியாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'தேவராட்டம்' படத்தில் நடித்தார். அந்தப் படம் குறிப்பிட்ட பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், இப்போதும் 'மாஸ்' படங்களில் நடிப்பதில் தனக்கு ஒருவித பயம் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.


தற்போது கௌதம் கார்த்திக் தனது கதைத் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 'மிஸ்டர் எக்ஸ்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் வேளையில், தனது பழைய தவறுகளைத் தைரியமாக ஒப்புக்கொண்ட கௌதம் கார்த்திக்கின் இந்த நேர்மையான பேச்சு அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions