TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் விஜய்!

Share This Article:

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர், திட்டத்தின் கீழ் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெற உள்ள நிலையில், இதற்காக ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் அமர்ந்து காலை உணவு அருந்தினார். மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், பள்ளியில் வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். மொத்தம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

Content image

திட்ட விரிவாக்கத்திற்காக நடப்பு 2026–27 நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலை உணவுத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.

மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதையும், வகுப்பறையில் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு, தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாகவும், பிற நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாகவும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. மேலும், பல பகுதிகளில் பள்ளிகளிலேயே சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions