TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: தங்கம் வென்ற இந்தியா!

Share This Article:

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: தங்கம் வென்ற இந்தியா!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஷஃபாலி வர்மா 48 ரன்களும், ரிச்சா கோஷ் ஆட்டமிழக்காமல் 49 ரன்களும் எடுத்தனர்.

217 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய பெண்கள் அணி ஆசிய விளையாட்டில் தொடர்ந்து 2-வது முறையாக கிரிக்கெட் தங்கத்தை கைப்பற்றியது.

மேலும், இந்தப் போட்டியில் 79 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

Content image

ஸ்மிருதி மந்தனா அதிரடி

அதன்படி, தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

அவருடன் பார்த்தி புஷ்பா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது.

69 ரன்களில் சுருண்ட இலங்கை

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே அதிர்ச்சி கொடுத்தனர்.

கேப்டன் சமரி அட்டப்பட்டு மட்டும் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். கவிஷா தில்ஹாரி 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இந்திய அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி மற்றும் ஷஃபாலி வர்மா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions