TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Share This Article:

மதுரையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை கமலினி சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்தத் திறமையையும் சாதனையும் கௌரவிக்கும் வகையில், அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், "கமலினி போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும்" எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

சென்னை:

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 217 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை, இந்திய வீராங்கனைகள் சிறப்பான பந்துவீச்சால் 69 ரன்களுக்குள் சுருட்டி, 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.

இந்த தங்கம் வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை கமலினி இடம்பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகை:

சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் புகழை உயர்த்திய கமலினியின் இந்தச் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Content image

முதலமைச்சரின் வாழ்த்து செய்தி:

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள மதுரை வீராங்கனை கமலினிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கமலினி போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும். இவரது வெற்றி தமிழ்நாட்டின் ஏராளமான இளைஞர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த இளம் வீராங்கனைக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக விளையாட்டு ரசிகர்கள் மத்தியிலும், விளையாட்டுத் துறையினரிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions